திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj kiyan
Last Modified: வியாழன், 6 பிப்ரவரி 2020 (17:50 IST)

விஜய் வீட்டில் வருமான வரி சோதனையில் என்ன தவறு உள்ளது ? அமைச்சர் ஜெயக்குமார்

விஜய் குறித்து ஜெயகுமார் பேட்டி
நாட்டில் இப்போதுள்ள ஒரே பேச்சு நடிகர் விஜய் வீட்டில் ஐடி ரெய்ட் என்பதாக உள்ளது.  தொடர்ந்து 20  மணி நேரத்திற்கு மேலாக ஐடிதுறையினர் விஜய் வீட்டில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது மேலும் இரண்டு அதிகாரிகள் வந்து விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதாவிடம் விசாரித்து வருகின்றனர்.
 
இதுகுறித்து அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
 
நடிகர் விஜய் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியத்தில் என்ன தவறு உள்ளது. இதில் எந்த உள்நோக்கமும் இல்லை என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், விஜய் வீட்டில் ரொக்கம் கைப்பற்றப்படவில்லை என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.