மருத்துவமனையில் ஜெயலலிதாவிற்கு நடந்தது என்ன? தடைகளை மீறி வெளியான குறும்படம்!
முன்னாள் முதல்வரான ஜெயலலிதாவின் மரணம் தமிழகத்தில் மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவரது மரணம் இன்றும் வரை பலருக்கும் சந்தேகத்தை கிளப்பி வருகிறது.
இந்நிலையில் தற்போது இவரது மரணத்தை சந்தேகப்படுத்தும் விதத்தில் ஜாக்லின் என்ற குறும்படம் தயாராகியுள்ளது.
சந்தேக மரணம் என்ற டேக் லைனோடு வெளியாகியுள்ள இந்த குறும்படத்தைவெளியிட கூடாது என்று தடை விதித்திருந்த நிலையில், அதையும் மீறி படக்குழுவினர் நேற்று இரவு குறும்படத்தை யூடியூபில் வெளியிட்டுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து அந்த குறும்படத்தில் நடித்தவர்கள் மற்றும் படத்திற்கு உதவியவர்கள் என அனைவரின் வீட்டுக்கும் சென்ற காவல்துறையினர், அவர்களை விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் தற்போது குறும்பட இயக்குனர் தலைமறைவாகியுள்ளார். இதையடுத்து குறும்படம் வெளியாக இருந்த தனியார் கட்டடத்தின் உரிமையாளரை, தற்போது தல்லாகுளம் காவல் நிலையத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.