பிற்பகல் 1 மணி வரை 11 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்..!
பிற்பகல் ஒரு மணி வரை தமிழகத்தில் உள்ள 11 மாவட்டங்களில் மிதமான மழை முதல் கன மழைக்கான எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி கடந்த 30ஆம் தேதி கரையை கடந்த நிலையில் இந்த புயல் காரணமாக பெய்த கனமழையால் விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி மற்றும் புதுவை பகுதிகளில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் புயல் கடந்த பின்னரும் மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், இன்று பிற்பகல் ஒரு மணி வரை நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பத்தூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், கடலூர், சென்னை, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய 11 மாவட்டங்களிலும் புதுவையிலும் லேசான மழை முதல் மிதமான மழை வர பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இதனை அடுத்து மேற்கண்ட பகுதியில் உள்ள பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.
Edited by Mahendran