இன்று காலை 10 மணி வரை 13 மாவட்டங்களில் கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!
வங்கக் கடலில் தோன்றிய புயல் கரையை கடந்தாலும் புயலின் தாக்கம் இன்னும் இருப்பதால் சில மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது என்பதை நாம் பார்த்து வருகிறோம். அந்த வகையில், மழை குறித்த விவரங்களை அவ்வப்போது வெளியிட்டு வரும் சென்னை வானிலை ஆய்வு மையம், சற்று முன் தமிழகத்தில் உள்ள 13 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று அறிவித்துள்ளது.
நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், சென்னை, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்பு என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து, மேற்கண்ட 13 மாவட்டங்களில் உள்ள பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். புயல் கரையை கடந்து வலுவிழந்து காணப்பட்டாலும், உள் மாவட்டங்களிலும், சென்னை உள்பட வட மாவட்டங்களில் மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Edited by Siva