வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 6 நவம்பர் 2024 (07:38 IST)

சென்னை உள்பட 3 மாவட்டங்களில் கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

Rain
சென்னை உள்பட 3 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மிதமான மழை முதல் கனமழை வரையும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வங்கக் கடலில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு மற்றும் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால், சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

அந்த வகையில் இன்று காலை 10 மணி வரை சென்னை, செங்கல்பட்டு, மற்றும் திருவள்ளூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை முதல் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
அதேபோல் நாளை நவம்பர் 7ஆம் தேதி தமிழகத்தில் உள்ள ஒன்பது மாவட்டங்களில் மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மன்னார் வளைகுடா மற்றும் இலங்கை பகுதியில் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருவதன் காரணமாக தமிழகத்திலும் புதுச்சேரியிலும் பரவலாக மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையை பொருத்தவரை இன்று பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


Edited by Siva