வியாழன், 28 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By anandakumar
Last Modified: திங்கள், 9 செப்டம்பர் 2019 (20:42 IST)

நாம் தமிழர் கட்சியின் சார்பில் 5 ஆயிரம் பனை விதைகளை நட்டனர்...

வறட்சி மிக்க கரூர்  மாவட்டத்தில் மீண்டும் இயற்கையை ஊக்குவிக்கவும், உதவவும்  நாம் தமிழர் கட்சியின் சார்பில்  20  ஆயிரம்  பனை  விதைகளை  நட திட்டமிட்டு, இன்று மட்டும் 5 ஆயிரம் பனை விதைகளை நட்டனர்.
தமிழக அளவில், கரூர் மாவட்டம் இந்த ஆண்டு மட்டுமில்லாமல், கடந்த ஆண்டும் மழை பொழிவும் இல்லாமல், வெயில் தாக்கத்தினால் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். 
 
கரூர்  மாவட்டத்தில்  20  ஆயிரம்  பனை  விதைகளை  நட  நாம் தமிழர் சார்பில் திட்டம் தீட்டியுள்ளதோடு, இன்ரு ஒரு நாள் மட்டும் கரூர் சட்டமன்ற தொகுதியில் 5 ஆயிரம் மரக்கன்றுகளை  நாம் தமிழர்  கட்சியின்  சுற்றுச்சூழல் பாசறை சார்பில் நடப்பட்டது. தமிழகம் முழுவதும் இன்று ஒரே நாளில் 10 லட்சம பனை விதைகளை திட்டமிட்டு உள்ள நிலையில்., கரூர் மாவட்டத்தில் கரூர், அரவக்குறிச்சி, குளித்தலை, கிருஷ்ணராயபுரம் ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதிகளுக்கும் 20 ஆயிரம் பனம் விதைகளை நடும் பணி துவங்கியது. கரூர் சட்டமன்ற தொகுதியில், மண்டிக்கடை, சின்னாண்டாங்கோயில் சாலை அருகிலும், பெரிய ஆண்டாங்கோயில் அருகே உள்ள, அமராவதி ஆற்றின் கரையோரங்களில் நாம் தமிழர் கட்சியின் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் செல்வ.நன்மாறன் தலைமையில் நடப்பட்டது. 
 
 செல்வ நன்மாறன் , மாவட்ட செயலாளர், நாம் தமிழர் கட்சி,பனம் விதைகளை நடும் பணி ,பனம் விதைகளை நடும் பணி ,நாம் தமிழர் கட்சி, nan thamilar party, tamilnadu, karur, tree palnt, aravakuruchi, seeman,