1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 22 ஜனவரி 2019 (18:31 IST)

தானங்களில் நம்ம தமிழகம் தான் முதலிடம் : விஜய பாஸ்கர் பெருமிதம்

அண்மைக் காலமாக இறப்பு மற்றும் விபத்துகளின் போது மூளைச்சாவு அடைபவர்களின்  உறுப்புகள் தானமாக பெறுவது குறித்த விழிப்புணர்வு கிராமத்திலும், நகரத்திலும் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் இரத்த தானம், உடலுறுப்புதானம் கண் தானம் என அனைத்திலும் தமிழகம் நம் தமிழகம் தான் முதலிடத்தில் உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்  கூறியுள்ளார்.
 
திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
 
'தாய் திட்டம் என்ற பெயரில் உருவாக்கப்பட்ட விபத்து காய சிகிச்சை மையங்கள் பொது மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. அதனால் இறப்பு விகிதம் குறைந்துள்ளது இவ்வாறு கூறினார். 
 
மேலும் இந்த திட்டத்தை வலுப்படுத்த ரூ.130 கோடி நிதி ஒதுக்கப்படுவதாகவும் இதனால் இறப்பு விகிதம் குறையும் எனவும், ரத்ததானம், கண் தானம், உடலுறுப்பு தானம் என அனைத்திலும் தமிழகம் தான் முதலிடத்தில் உள்ளதாக தெரிவித்த அவர் கண் தானத்தின் மூலம் தேவைக்கு அதிகமான கண்கள் உள்ளதாகவும், தானம் பெறுபவர்களுக்கான காத்திருப்பில் யாரும் இல்லை'  என்று  தெரிவித்துள்ளார்.