வியாழன், 20 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 20 பிப்ரவரி 2025 (12:44 IST)

அண்ணாமலைக்கு தில் இருந்தா அண்ணாசாலைக்கு வர சொல்லுங்க! - உதயநிதி ஸ்டாலின் சவால்!

Udhayanithi Annamalai

இந்தி விவகாரம் குறித்து திமுக - பாஜக இடையே உரசல் ஏற்பட்டுள்ள நிலையில், அண்ணாமலைக்கு சவால் விடுக்கும் வகையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார்.

 

தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு வழங்க வேண்டிய சமக்ர சிக்‌ஷா திட்டத்தின் நிதியை மும்மொழிக் கொள்கையை ஏற்காததை காரணமாக காட்டி தர மறுப்பது குறித்து பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. இந்நிலையில் பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பலர் தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் மட்டும் மும்மொழியை கொண்டு வரவிடாமல் செய்வதாகவும், அரசியல்வாதிகளின் வாரிசுகள் மும்மொழி படிப்பதாகவும் குற்றம் சாட்டி பேசி வருகிறார்.

 

இந்நிலையில் இதுகுறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் “தமிழ்நாடு கேட்கும் நிதியை வாங்கித் தர துப்பில்லை அவருக்கு. பிரச்சினையை திசை திருப்புவதற்காக சவால் விடுகிறார். 2018ல் பிரதமர் மோடி வந்தபோதே எதிர்ப்புகளை கண்டு சுவரை இடித்துக் கொண்டு மாற்று வழியில் சென்றதை எல்லாரும் பார்த்துக் கொண்டுதான் இருந்தார்கள். அண்ணாமலைக்கு தைரியம் இருந்தால் அண்ணாசாலைக்கு வர சொல்லுங்கள்” என பேசியுள்ளார். மேலும், பிரச்சினை நிதி அளிப்பது தொடர்பானது, அதை தவிர்த்து திசை திருப்பும் அரசியலை செய்ய வேண்டாம் என கூறியுள்ளார்.

 

Edit by Prasanth.K