1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 31 ஆகஸ்ட் 2020 (18:22 IST)

60 தொகுதிகளில் தனித்து போட்டியிட தயார்: பாஜக தலைவர் எல்.முருகன் அறிவிப்பு

கடந்த சில நாட்களாகவே அதிமுக மற்றும் பாஜக தலைவர்கள் இடையே கருத்து மோதல் ஏற்பட்டு வருகிறது என்பதும் குறிப்பாக பாஜக துணைத் தலைவர் விபி துரைசாமி அவர்கள் பாஜக தலைமையில் தான் கூட்டணி என்று கூறியது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது என்பதும் தெரிந்ததே 
 
இந்த நிலையில் அதிமுக தலைமையில்தான் கூட்டணி என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உறுதி செய்தது உறுதி செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் தற்போது சட்டமன்ற தேர்தலில் பாஜக தனித்து போட்டியிட்டாலும் 60 தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது என்றும் தனித்து போட்டியிடும் பாஜக தயாராக உள்ளது என்றும் பாஜக தலைவர் எல்.முருகன் அவர்கள் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
ஆனால் அதே நேரத்தில் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி உறவு சிறப்பாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மும்மொழி கொள்கையில் யாரும் அரசியல் செய்யக்கூடாது என்றும் மும்மொழிக் கொள்கை மாணவர்களுக்கு அவசியமான ஒன்று என்றும் அவர் தெரிவித்தார்.
 
அதிமுக-பாஜக கூட்டணி சிறப்பாக உள்ளது என்று கூறினாலும் 60 தொகுதிகளில் தனித்து போட்டியிட தயார் என எல்.முருகன் அவர்கள் கூறியிருப்பது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது