வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 14 பிப்ரவரி 2022 (17:46 IST)

திமுக வேட்பாளர் மரணம்: வத்றாயிருப்பில் தேர்தல் ரத்து!

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பில் திமுக வேட்பாளர் ஒருவர் மரணமடைந்ததை அடுத்து அந்த தொகுதியில் தேர்தல் நிறுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பில் உள்ள இரண்டாவது வார்டு திமுக வேட்பாளர் முத்தையா என்பவர் திடீரென மாரடைப்பால் மரணமடைந்தார்
 
இதனையடுத்து அந்த தொகுதியில் மட்டும் தேர்தல் நிறுத்தப்படுவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
ஏற்கனவே ஒரு சில தொகுதிகளில் வேட்பாளர்கள் மரணம் காரணமாக தேர்தல் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் தற்போது மேலும் ஒரு தொகுதியில் தேர்தல் நிறுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது