வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 22 செப்டம்பர் 2024 (07:46 IST)

கொடைக்கானலுக்கு தண்ணீர் பாட்டில் கொண்டு சென்றால் வரி: மாவட்ட நிர்வாகம்..!

கொடைக்கானலுக்கு ஐந்து லிட்டருக்கு குறைவான தண்ணீர் அதிகமாக கொண்டு சென்றால் பசுமை வரியாக 20 ரூபாய் விதிக்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கொடைக்கானல் பகுதியில் 5 லிட்டருக்கு குறைவான அனைத்து பிளாஸ்டிக் மற்றும் தண்ணீர் பாட்டில்களுக்கு, குளிர்பானங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி பொதுமக்கள், வியாபாரிகள், சுற்றுலாப் பயணிகள் 5 லிட்டருக்கு குறைவான தண்ணீர் பாட்டில்கள் மற்றும் குளிர்பானங்கள் வைத்திருந்தால், ஒவ்வொரு பாட்டிலுக்கும் 20 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று கொடைக்கானல் ஒன்றியத்தில் உள்ள 15 ஊராட்சிகளில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

எனவே, ஐந்து லிட்டருக்கு குறைவான தண்ணீர் அல்லது குளிர்பான பாட்டில்களை கொடைக்கானலுக்கு செல்லும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வைத்திருந்தால், பசுமை வரியாக ஒவ்வொரு பாட்டிலுக்கும் 20 ரூபாய் வசூலிக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பு கொடைக்கானல் செல்லும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Edited by Siva