என்னிடம் இருப்பது சசிகலாவின் சொத்து இல்ல! – வழக்கு தொடுத்த தினகரன்!
தான் சசிகலாவின் பினாமி எனக்கூறி தனது சொத்துகளை தவறுதலாக வருமானவரித் துறையினர் முடக்கியுள்ளதாக தொழிலதிபர் வி.எஸ்.ஜே. தினகரன் வழக்கு தொடுத்துள்ளார்.
நிதி நிறுன தொழிலதிபரான வி.எஸ்.ஜே. தினகரன் என்பவர் பெரம்பூர் ஸ்பெக்ட்ரம் மாலில் தனிக்கடை ஒன்றும் நடத்தி வருகிறார். சில ஆண்டுகளுக்கு முன்னர் 11 ஆயிரம் சதுர அடி பரப்பளவு கொண்ட ஒரு நிலத்தை தினகரன் வாங்கியுள்ளார். கடந்த 2017ம் ஆண்டு சசிகலா வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்திய நிலையில், தினகரனின் வீடு மற்றும் அலுவலகங்களிலும் சோதனை நடத்தியுள்ளனர்.
அதை தொடர்ந்து வி.எஸ்.ஜே தினகரனுக்கு சொந்தமான ஸ்பெக்ட்ரம் மால் கடை மற்றும் நிலம் ஆகிய சொத்துகள் முடக்கப்பட்டன. இதுகுறித்து வருமானவரித்துறைக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள வி.எஸ்.ஜே. தினகரன் வருமானவரித் துறையினர் தனது சொத்துகளை பினாமி சொத்து என தவறுதலாக முடக்கி வைத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த உரிய ஆவணங்களுடன் வந்து பதிலளிக்க வருமான வரித்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.