1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 1 டிசம்பர் 2017 (10:24 IST)

ஆர்.கே.நகரில் விஷால் போட்டி? இன்று அறிவிப்பு வெளிவரும் என தகவல்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வரும் 21ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் அதிமுக, திமுக உள்பட அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்துவிட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன.
 
இந்த நிலையில் கமல்ஹாசன் ஆதரவுடன் நடிகர் விஷால் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவார் என்று கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் செய்திகள் வெளியாகின.
 
இந்த செய்தியை உறுதிப்படுத்தும் வகையில் விஷால் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடவுள்ளதாகவும் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று அல்லது நாளை வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.