மாணவியின் மர்மமான தற்கொலை: சத்யபாமா பல்கலையில் பயங்கர வன்முறை
சென்னை செம்மஞ்சேரியில் உள்ள சத்யபாமா பல்கலையில் ஆந்திர மாநில மாணவி ஒருவர் இன்று திடீரென தற்கொலை செய்து கொண்டதால் பல்கலையில் உள்ள விடுதி மாணவர்கள் திடீர் போராட்டத்தில் இறங்கினர்
இந்த போராட்டம் சில நிமிடங்களில் வன்முறையாக வெடித்தது. பல்கலைக்கழக வளாகத்தில் இருந்த பேருந்துகள் தீவைக்கப்பட்டன. நூலக கண்ணாடிகள் உடைக்கபட்டன். மேலும் மரங்களுக்கும் மாணவர்கள் தீவைத்ததால் பல்கலைக்கழக வளாகமே போர்க்களம் போல் காணப்படுகிறது
தற்கொலை செய்து கொண்ட மாணவியின் பெயர் ராகமோனிகா என்றும் அவர் முதலாம் ஆண்டு படித்து வந்தார் என்றும் கூறப்படுகிறது. மாணவியின் தற்கொலைக்கு இதுவரை காரணம் தெரியவில்லை என்பதால் இதுகுறித்து விசாரணை செய்து மாணவியின் தற்கொலைக்கு காரணமானவர்களை கண்டுபிடித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மாணவர்களின் கோரிக்கையாக உள்ளது.