திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 2 டிசம்பர் 2021 (10:52 IST)

2021ன் டாப் 10 இந்திய யூட்யூப் சேனல்கள்! – பட்டியலில் ஒரேயொரு தமிழ் யூட்யூப் சேனல்!

2021ம் ஆண்டிற்கான இந்தியாவின் சிறந்த யூட்யூப் சேனல்களின் டாப் 10 பட்டியலில் ஒரு தமிழ் சேனலும் இடம்பெற்றுள்ளது.

தகவல் தொழில்நுட்பம் மற்றும் டேட்டா வசதியால் அனைவர் கையிலும் ஸ்மார்ட்போன்கள் உள்ள நிலையில் யூட்யூபில் வீடியோ பார்ப்பவர்கள் அதிகரித்துள்ள நிலையில், வீடியோ வெளியிடும் யூட்யூப் சேனல்களும் அதிகரித்துள்ளன.

இந்த ஆண்டு முடிவுக்கு வந்துள்ள நிலையில் இந்த ஆண்டில் அதிக பார்வையாளர்கள், சப்ஸ்க்ரைபர்கள் மற்றும் வீடியோ கொண்ட டாப் 10 சேனல்களை யூட்யூப் பட்டியலிட்டுள்ளது. இந்த சேனல்களில் அதிகபட்சமாக அனைத்துமே வீடியோ கேம் விளையாட்டு சார்ந்த சேனல்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பட்டியலில் உணவு குறித்த யூட்யூப் சேனலான தமிழகத்தை சேர்ந்த வில்லேஜ் குக்கிங் சேனலும் இடம் பிடித்துள்ளது.

சமீபத்தில் வில்லேஜ் குக்கிங் சேனல் தமிழ் யூட்யூப் சேனல்களிலேயே முதன்முறையாக 1 கோடி சப்ஸ்க்ரைபர்களை பெற்ற நிலையில் இந்த ஆண்டின் இந்தியாவின் டாப் 10 சேனல்களில் ஒன்றாக இடம்பெற்றுள்ளது.