1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : திங்கள், 10 ஜூன் 2024 (13:37 IST)

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்.! தேர்தல் நடத்தை விதிகள் இன்று முதல் அமல்..!!

Vikravandi Election
விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகள் இன்று முதல் அமுலுக்கு வருவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
 
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி உடல் நலக்குறைவால் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து அந்த தொகுதி காலியானதாக சட்டப்பேரவை செயலாளர் அறிவித்தார்.
 
இந்நிலையில் விக்கிரவாண்டி தொகுதிக்கு வருகிற ஜூலை 10-ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் விழுப்புரம் மாவட்டம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் இன்று முதல் அமுலுக்கு வருவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.


மேலும் மக்களவை தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள், விக்கிரவாண்டி இடை தேர்தலில் பயன்படுத்தப்படாது என்று தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.