Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பார்வையற்ற சினிமா பின்னணி பாடகி விஜயலட்சுமி–அனூப் திருமண நிச்சயதார்த்தம்...

Written By VM
Updated: புதன், 12 செப்டம்பர் 2018 (13:23 IST)
பார்வையற்ற சினிமா பின்னணி பாடகியான வைக்கம் விஜயலட்சுமி; பலகுரல் கலைஞர் அனூப் என்பவருக்கும் இனிதே நிச்சயதார்த்தம் நடந்தது.

 
மலையாள பட உலகில் பிரபலமான பின்னணி பாடகியாக இருப்பவர் வைக்கம் விஜயலட்சுமி.  இவர் பிருதிவிராஜ் நடித்த ஜே.சி.டேனியல் படத்தில் இடம்பெற்ற காற்றே காற்றே என்ற பாடலை பாடி தமிழ் பட உலகுக்கு வந்தார். 
 
விக்ரம் பிரபு நடித்த ‘வீர சிவாஜி’ படத்தில் பாடிய ‘சொப்பன சுந்தரி நான்தானே,  என்ற பாடல் விஜயலட்சுமியை மேலும் பிரபலப்படுத்தியது.
 
இந்த நிலையில் பலகுரல் கலைஞர் அனூப் என்பவருக்கும் விஜயலட்சுமிக்கும் திருமணம் செய்து வைக்க பெற்றோர்கள் முடிவு செய்தனர். இவர்களின் திருமண நிச்சயதார்த்தம் விஜயலட்சுமியின் வீட்டில் நடந்தது. நெருங்கிய உறவினர்கள் கலந்து கொண்டனர். விஜயலட்சுமி–அனூப் திருமணம் அடுத்த மாதம் (அக்டோபர்) 22–ந்தேதி வைக்கம் மகாதேவ கோவிலில் நடக்கிறது.

எல்லாம் காட்டு

தமிழ்நாட்டில் பைக் டாக்சிக்கு அனுமதி இல்லை!.. தமிழக அரசு அதிரடி...

அதிமுகவின் இன்னொரு விக்கெட் காலி.. தவெகவில் இணைந்தார் வடசென்னை ராஜேஷ்...

பல ஆண்டுகளாக ரூ.8.77 கோடி வாடகை கொடுக்கமால் டிமிக்கி கொடுத்த நிறுவனம்.. 2 மாதத்தில் வசூல் செய்த தவெக அரசு..

அரசு அதிகாரிகளின் பணி உயர்வு விவகாரம்.. முதல்வர் விஜய் நேரடி ஒப்புதல் தேவை.. அதிரடி உத்தரவு..

ஜியோவின் 365 நாட்கள் திட்டம்.. 912 ஜிபி-க்கும் அதிகமான டேட்டா.. அன்லிமிடெட் அழைப்புகள்..

அடுத்த கட்டுரையில்