விஜயகாந்தின் மகனும் ஒலிம்பிக்கின் இந்திய நாயகியும் - வீடியோ
விஜயகாந்தின் மகனும் ஒலிம்பிக்கின் இந்திய நாயகியும் - வீடியோ
பிரேசில் நாட்டின் ரியோ நகரில் நடந்துவரும் ஒலிம்பிக் போட்டியில், மகளிருக்கான பேட்மிண்டன் ஒற்றையர் இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய பி.வி.சிந்து, கேப்டன் விஜயகாந்தின் மூத்த மகனான விஜயபிரபாகரனின் 'சென்னை ஸ்மாஷர்ஸ்' டீமில் விளையாடியவர். அதன் மூலம் இருவருக்கும் நட்பு ஏற்பட்டது.
இந்நிலையில், நானும் ரவுடிதான் படத்தில் வரும் வசனத்தை பேசி இருவரும் டப்ஸ்மாஷ் செய்துள்ள வீடியோ, இணையதளத்தில் வெளியாகி அனைவராலும் பகிரப்பட்டு வருகிறது. அதில், சிந்து, நயன்தாரா பேசும் வசனத்தை பேசுகிறார். சிந்து பேசிய பின் விஜயபிரபாகரன் விஜய்சேதுபதி பேசும் வசனத்தை பேசுகிறார்.