விஜயகாந்த் இரங்கல் பேனர் கிழிப்பு.! தாராபுரத்தில் பரபரப்பு..!!
திருப்பூர் அருகே ஓபிஎஸ் அணி சார்பில் வைக்கப்பட்டிருந்த கேப்டன் விஜயகாந்தின் இரங்கல் பேனரை மர்ம நபர் ஒருவர் கத்தியால் துண்டு துண்டாக கிழித்து சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் தேமுதிக முன்னாள் தலைவரும் திரைப்பட நடிகருமான விஜயகாந்த் மறைவையொட்டி அதிமுக ஓபிஎஸ் அணி திருப்பூர் புறநகர் மாவட்ட செயலாளர் காமராஜ் சார்பாக இரங்கல் பேனர் தாராபுரம் அண்ணா சிலை அருகில் வைத்திருந்தனர். அனைத்து கட்சி சார்பில் அண்ணா சாலை பகுதியில் மறைந்த கேப்டன் விஜயகாந்த்திற்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிலையில் அதிகாலை மர்ம நபர் ஒருவர் விஜயகாந்த் மறைவிற்காக வைக்கப்பட்ட பேனரை கத்தியால் துண்டு துண்டாக கிழித்ததாக கூறப்படுகிறது. இதை அறிந்த ஓபிஎஸ் அணியினர் அண்ணா சிலை அருகில் ஒன்று கூட பரபரப்பு ஏற்பட்டது. அங்கு வந்த காவல்துறையினர் ஓபிஎஸ் அணியினரை சமாதானம் செய்து கிழிந்த பேனரை அகற்றினார்.
இது குறித்து தாராபுரம் காவல் நிலையத்தில் ஓபிஎஸ் அணி நிர்வாகிகள் புகார் அளித்தனர். விஜயகாந்த் இரங்களுக்காக வைத்த பேனரை கிழித்த மர்மநபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். சி.சி.டிவி காட்சிகள் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.