வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 26 செப்டம்பர் 2018 (14:07 IST)

டெபாசிட் வாங்க முடியுமா? -விஜயபாஸ்கருக்கு தினகரன் சவால்

திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலில் எங்கள் அணியின் வேட்பாளரை எதிர்த்து நின்று டெபாசிட் வாங்க முடியுமா என அமைச்சர் விஜயபாஸ்கருக்கு டிடிவி தினகரன் சவால் விடுத்துள்ளார்.



ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அதிமுக ஒபிஎஸ் அணி, இபிஎஸ் அணி, டிடிவி அணி என மூன்றாக உடைந்தது. அதில் ஒபிஎஸ், இபிஎஸ் அணிகள் சமாதானமடைந்து தற்போது அதிகாரப்பூர்வ அதிமுக அணியாக செயல்பட்டு வருகின்றன. தினகரன், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற கட்சியை ஆரம்பித்து ஆர்கே நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றார்.

இவ்விரு அணிகளும் அவ்வப்போது வார்த்தை மோதல்களில் ஈடுபட்டு வருகின்றன. நேற்று அதிமுக சார்பில் நடைபெற்ற கண்டனப் பொதுக்கூட்டத்தில் பங்கு பெற்று பேசிய அதிமுக வின் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் புதுக்கோட்டைத் தொகுதியில் தன்னை எதிர்த்து நின்று வெற்றிபெற முடியுமா என டிடிவி தினகரனுக்கு கேள்வியெழுப்பியிருந்தார்.

இந்நிலையில் அதற்கு பதிலளிக்கும் விதமாக பேசிய தினகரன் திருவாரூரில் நடைபெறவிருக்கும் இடைத்தேர்தலில் தங்கள் அணியின் வேட்பாளரை எதிர்த்து நின்று டெபாசிட் வாங்க முடியுமா என சவால் விடுத்துள்ளார்.