தண்ணீரை அதிமுக உற்பத்தி செய்யவில்லை. உளறிக்கொட்டிய கேப்டன் மகன்!
அரசியல் என்ற அரிச்சுவடியே தெரியாமல் விஜயகாந்த் மகன் என்ற ஒரே ஒரு தகுதியை மட்டுமே வைத்து கொண்டு அரசியல் செய்து வருபவர் விஜய்பிரபாகரன். விஜய்காந்த் அமெரிக்காவில் இருந்தபோதும் சரி, மக்களவை தேர்தலின்போதும் சரி, விஜய்பிரபாகரனின் பேச்சும் செயலும் அக்கட்சி தொண்டர்களை மட்டுமின்றி பொதுமக்களையும் எரிச்சலடைய செய்தது.
இந்த நிலையில் தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் தலைவிரித்தாடும் தண்ணீர் பிரச்சனை குறித்து கருத்து கூறிய விஜயபிரபாகரன், 'தண்ணீரை அதிமுக உற்பத்தி செய்யவில்லை என்று உளறினார். தண்ணீரை யாராவது உற்பத்தி செய்ய முடியுமா? என்று கேள்வி எழுப்பி நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
மேலும் தண்ணீர் பிரச்சனை மழை பெய்தால் எல்லாம் சரியாகிவிடும் என்றும் விஜய்பிரபாகரன் தெரிவித்தார். மழை பெய்தால் தண்ணீர் பிரச்சனை சரியாகிவிடும் என்பது எல்.கே.ஜி குழந்தைக்கு கூட தெரியுமே, இதை இவர் சொல்ல வேண்டுமா? என்றும் நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.
ஏற்கனவே விஜயகாந்த் சேர்த்து வைத்திருந்த கட்சி, தொண்டர்கள், மதிப்பு, புகழ், ஓட்டு சதவீதம் ஆகிய அனைத்தையும் இழந்துவிட்ட நிலையில் தற்போது கடன் காரணமாக சொத்தையும் இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது