வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 5 ஜூலை 2022 (14:54 IST)

விஜய் வசந்த் எம்பியின் ரூ.1.3 லட்சம் மதிப்பிலான பேனா திருட்டு: போலீசில் புகார்!

vijay vasanth pen
விஜய் வசந்த் எம்பியின் ரூ.1.3 லட்சம் மதிப்பிலான பேனா திருட்டு: போலீசில் புகார்!
 காங்கிரஸ் கட்சியின் எம்பி விஜய் வசந்தின் 1.3 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பேனா காணாமல் போனதாக காவல்துறையில் புகார் அளித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
காங்கிரஸ் எம்பி விஜய் வசந்த் கடந்த பல ஆண்டுகளாக ரூ 1.3 லட்சம் மதிப்புள்ள பேனாவை பயன்படுத்தி வருகிறார். அந்த பேனா திடீரென காணாமல் போய் விட்டதாக அவர் கிண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்
 
கிண்டியில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கடந்த வாரம் கலந்து கொண்டதாகவும் அப்போது அந்த காணாமல் போய் விட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த பேனாவின் மதிப்பு ஒரு லட்சத்து 37 ஆயிரத்து 900 என்று கூறப்படுகிறது