செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 21 ஜூன் 2022 (21:06 IST)

தமிழகத்தில் 600 செல்போன் டவர்கள் திருட்டு: அதிர்ச்சி தகவல்!

tower
தமிழகத்தில் செயல்படாத 600 செல்போன் டவர்கள் திருடு போய் இருப்பதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
ஈரோடு மாவட்டம் சென்னிமலை என்ற பகுதியில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான செல்போன் டவர்களை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. 
 
கடந்த 2017 ஆம் ஆண்டிலிருந்து இந்த டவர்கள் செயல்படவில்லை என்றும் இந்த டவர்கள் கண்காணிப்பில் இல்லாத நிலையில் மர்ம நபர்கள் திருடி இருப்பதாகவும் அந்தப் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
டவர் அமைத்த நிறுவனத்திற்கு சொந்தமான 600 செல்போன் டவர்கள் மாயமாகி உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது இது குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்