1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 21 அக்டோபர் 2020 (10:08 IST)

அன்புள்ள விஜய் சேதுபதி... குஷ்பு போட்ட டிவிட்!

பாஜக பிரமுகர் குஷ்பு விஜய் சேதுபதிக்கு டிவிட்டரில் ஆறுதல் தெரிவித்துள்ளார். 

 
தமிழகத்தில் கடந்த வாரம் பெரும் பேசுபொருளாக இருந்தது விஜய் சேதுபதி முத்தையா முரளிதரன் வாழ்க்கைப் படமான 800 படத்தில் அவர் நடிக்க வேண்டாம் என்பதுதான். 
 
இதனையடுத்து, நடிகர் விஜய் சேதுபதி ஒரு இணையற்ற கதை சிறந்த தனித்துவமான கதையான முரளிதரனின் வாழ்க்கை வரலாறு படத்தில் நான் நடிப்பதில் உறுதியாக இருக்கிறேன் என்று ஒரு இலங்கை மீடியாவுக்கு பேட்டியளித்தார். 
 
இதன் பிறகு முத்தையா முரளிதரன் தனது டுவிட்டர் பக்கத்தில், அதில் எனது வாழ்க்கை வரலாறு படத்தில் விஜய் சேதுபதிக்கு கடுமையான எதிர்ப்புகள் ஏற்பட்டது. என்னால் தமிழ்நாட்டில் ஒரு தலைசிறந்த கலைஞன் பாதிப்படுவதை நான் விரும்பவில்லை. அவரது கலைவாழ்வில் என்னால் தடை ஏற்பட்டுவிடக் கூடாது என்பதைக் கருத்தில் கொண்டு இத்திரைப்படத்திலிருந்து அவரை விலகிக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். என்று கூறினார். 
 
இதற்கு விஜய் சேதுபதி தனது டுவிட்டர் பக்கத்தில் நன்றி வணக்கம் என்று பதிவிட்டுள்ளார். எனவே முத்தையா முரளிதரனின் 800 படத்திலிருந்து விலகுவது உறுதியானது. இந்நிலையில் பாஜக பிரமுகர் குஷ்பு, அன்புள்ள விஜய் சேதுபதி, நீங்கள் ஒரு வலிமையான நபர். நீங்கள் இருப்பது போலவே இருங்கள். உங்கள் குடும்ப உறுப்புனர்களுக்கு அச்சுறுத்தல் வந்தது காட்டுமிராண்டிதனமானது. 
 
நீங்கள் செய்ததை செய்ய ஒரு பெரிய மனசு வேண்டும். நாங்கள் உங்களுடன் ஒற்றுமையுடன் நிற்கிறோம் என தெரிவித்துள்ளார்.