வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 21 அக்டோபர் 2020 (08:17 IST)

சென்னை - பெங்களூரூ : இன்று முதல் சிறப்பு ரயில் சேவை!

இன்று முதல், சென்னை சென்ட்ரல் - பெங்களூரூ இடையே இன்று முதல் டபுள் டெக்கர் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. 
 
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இன்னும் ரயில்வே துறையில் இயல்பு நிலை திரும்பவில்லை. தற்போதைக்கு சிறப்பு ரயில்கள் மட்டுமே இயங்கி வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் இருந்து வெளி மாநிலங்களுக்கு பண்டிகை கால சிறப்பு ரயில் கூடுதலாக இயக்கப்படுகிறது.  
 
இதன்படி மதுரையில் இருந்து பிகானேருக்கு சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. மதுரை - பிகானேர் இடையே அக்டோபர் 22, 29 மற்றும் நவம்பர் 05, 12, 19, 26 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 
 
அதேபோல் ராமேஸ்வரத்தில் இருந்து புவனேஸ்வர் மற்றும் நெல்லையில் இருந்து ஜாம்நகர் இடையே பண்டிகை கால சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்றும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
 
மேலும் சென்னை- கயா, புவனேஷ்வர்- புதுச்சேரி ஆகிய மார்க்கங்களிலும், சென்னை-கயா சிறப்பு ரயில்களும் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று முதல், சென்னை சென்ட்ரல் - பெங்களூரூ இடையே இன்று முதல் டபுள் டெக்கர் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. 
 
சென்னை சென்ட்ரலில் தினமும் காலை 7.25 மணிக்கு புறப்படும் ரயில் மதியம் 1.10 மணிக்கு பெங்களூரு சென்றடையும். பெங்களூரூவில் தினமும் பகல் 2.30 மணிக்கு புறப்படும் ரயில் இரவு 8.30 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.