தெலுங்கு படத்தில்.....விஜய் சேதுபதி கதாப்பாத்திரல் நடிக்கும் சமுத்திரகனி !
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அல்லு அர்ஜூன். இவர் நடித்து வரும் படம் புஷ்பா.
இப்படம், சில ஆண்டுகளுக்கு முன் தமிழர்கள் 20 பேர் செம்மரம் கடத்தியதாக ஆந்திராவில் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தை அடிப்படையாகக்கொண்டது என்ற தகவல் வெளியானது.
இதில் காவல்துறை அதிகாரி வேடத்தில் முதலில் நடிக்க இருந்தது விஜய் சேதுபதி என்றும் ஆனால் வில்லன் கதாப்பாத்திரமென்று கூறப்பட்டது. ஆனால் இப்படம் தமிழர்களுக்கு எதிரான படம் என்று செய்திகள் வெளியானதால் இப்படத்திலிருந்து விஜய் சேதுபதி விலகினார்.
இந்நிலையில் இந்தக் கதாப்பாத்திரத்தில் நடிகர் சமுத்திரகனி நடிக்கவுள்ளார் என்ற தகவல் வெளியாகிறது.