2031ல் விஜய் என்னும் நான்.. ! – விஜய் ரசிகர்கள் போஸ்டரால் பரபரப்பு!
மதுரையில் விஜய் ரசிகர்கள் ஒட்டியுள்ள விஜய் குறித்த போஸ்டர் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் விஜய் அரசியலுக்கு வருவாரா என்பது குறித்து அவரது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு இருந்து வந்தாலும் இதுகுறித்த எந்த முடிவையும் அவர் அறிவிக்காமல் இருந்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் விஜய் ஆதரவுடன் போட்டியிட்ட அவரது விஜய் மக்கள் இயக்கத்தினர் 169க்கு 110 இடங்களில் வெற்றிப் பெற்றுள்ளனர்.
இதையொட்டி மதுரையில் விஜய் ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டரில் “பதவியேற்பு.. 2031 ஜோசப் விஜய் என்னும் நான்… ” என்று வாசகங்கள் அடங்கிய போஸ்டரை ஒட்டியுள்ளனர். முன்னதாக விஜயை அரசியல் தலைவர்களுடன் இணைத்து மார்பிங் செய்து ரசிகர்கள் போஸ்டர் ஒட்டியபோதே இதுபோன்ற நடவடிக்கைகளை நிறுத்திக் கொள்ளுமாறு மக்கள் இயக்க தலைமை ஒருங்கிணைப்பாளர் புஸ்ஸி ஆனந்த அறிக்கை விட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.