விஜய் மக்கள் இயக்க நிர்வாகி கொலை- திமுக கவுன்சிலர் கைது
தஞ்சாவூர் அருகே திருக்காட்டுப் பள்ளி அருகே முன்னாள் அதிமுக கவுன்சிலரும், விஜய் மக்கள் இயக்க நிர்வாகியுமான பிரபு வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் திமுக கவுன்சிலர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகேயுள்ள பகுதியில் வசித்து வந்தவர் பிரபு. இவர், திருக்காட்டுப்பள்ளி பேரூராட்சியில் முன்னாள் வார்டு கவுன்சிலாகப் பணியாற்றியுள்ளார்.
இவர் நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கத்தில் நிர்வாகியாக இருந்து வந்துள்ளார். இவர் சொந்தமாக தொழில் செய்து வந்த நிலையில், சமூக ஆர்வலரான இவர், தன் வேலைகளை முடித்து விட்டு தன் அண்ணன் வீட்டு அருகில் ஒரு கடை அருகில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது, பைக்கில் வந்த மர்ம நபர்கள் அவரை வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பியோடினர்.
இதுபற்றி தகவல் அறிந்து சம்பவம் இடத்திற்கு வந்த போலீஸார, பிரவுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்து, இந்தக் கொலை சம்பந்தமாக வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இக்கொலை தொடர்பாக திமுக கவுன்சிலர் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்து, திமுக கவுன்சிலர் பாஸ்கரை போலீஸார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகிறது.