பாகிஸ்தானில் ரயில் தடம் புரண்டு விபத்து....22 பேர் பலி...பலர் படுகாயம்
பாகிஸ்தான் நாட்டில் உள்ள தெற்கு சிந்து மாகாணத்தில் ரயில் தடம் புரண்டு விபத்திற்குள்ளானது. இவ்விபத்தில் 22 பேர் பலியாகியுள்ளனர்.
பாகிஸ்தான் நாட்டில் ஷபாஷ் ஷெரீப் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. இங்குள்ள தெற்கு சிந்து மாகாணத்தில் உள்ள நவாப்ஷா நகரில் சஹாரா ரெயில் நிலையம் அருகில்,கராச்சியில் இருந்து அபோதாபாத் நோக்கிச் சென்று கொண்டிருந்த ரயில் ஒன்று தடம் புரண்டது.
இந்த விபத்தில், 8 பெட்டிகள் தண்டவாளத்தைவிட்டு இறங்கி விபத்திற்குள்ளானது.
இதில், ரயிலில் பயணம் செய்த 22 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 80 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகிறது.
இந்த விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாக கூறப்படுகிறது.