திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 27 ஜனவரி 2022 (11:24 IST)

நகர்புற உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் – புஸ்ஸி ஆனந்த் அறிவிப்பு

தமிழகத்தில் நடைபெற உள்ள நகர்புற உள்ளாட்சி தேர்தலிலும் விஜய் மக்கள் இயக்கத்தினர் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19ம் தேதி அன்று ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நாளை முதல் தொடங்கப்படுகிறது. முன்னதாக நடந்த 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினர் பலர் போட்டியிட்டு வெற்றி பெற்றனர்.

இந்நிலையில் தற்போது நடைபெற உள்ள நகர்புற உள்ளாட்சி தேர்தலிலும் விஜய் மக்கள் இயக்கம் போட்டியிட உள்ளதாக மக்கள் இயக்க தலைவர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார். விஜய் மக்கள் இயக்கம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் விஜய் புகைப்படம் மற்றும் இயக்க கொடியை பயன்படுத்திக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.