தாய் தந்தை மீது வழக்கு போட்ட நடிகர் விஜய்!
நடிகர் விஜய் தனது தாய் தந்தை உள்பட 11 பேர்கள் மீது சென்னை சிவில் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்துள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய் என்பதும் இவரது படம் மிகப் பெரிய அளவில் வியாபாரம் ஆகும் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் நடிகர் விஜய் தனது தாய் தந்தை உள்பட 11 பேர் மீது சென்னை சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்
தனது பெயரையோ தனது ரசிகர் மன்றத்தின் பெயரையோ பயன்படுத்துவதை தடை செய்யக்கோரி தனது தந்தை எஸ்ஏ சந்திரசேகர் மற்றும் தாய் உள்பட 11 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளார்
இந்த வழக்கு இந்த மாத இறுதியில் விசாரணைக்கு வர உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. தந்தை தாய் ஆகிய இருவர் கூட தனது பெயரை பயன்படுத்தக்கூடாது என நடிகர் விஜய் வழக்கு பதிவு செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது