புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Arun Prasath
Last Modified: திங்கள், 20 ஜனவரி 2020 (08:35 IST)

விவசாயியாக மாறிய எடப்பாடியார்!!.. புகழ்ந்து தள்ளும் துணை குடியரசு தலைவர்

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வயல்வெளியில் விவசாயி போல் போஸ் கொடுத்த புகைப்படம் வைரலாகி வரும் நிலையில், தான் ஒரு விவசாயி என்பதை முதல்வர் பழனிசாமி மறக்கவில்லை என துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு பாராட்டியுள்ளார்.

பொங்கல் பண்டிகையன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சேலம் மாவட்டம் சிலுவம்பாளையத்தில் பொங்கல் பண்டிகையை கொண்டாடினார். அப்போது அவர் வயலில் வேலை பார்த்துக்கொண்டிருப்பது போன்ற புகைப்படம் வெளியானது.

இந்நிலையில் இதனை குறித்து துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு தனது அலுவலக டிவிட்டர் பக்கத்தில், “எடப்பாடி கே பழனிசாமி தனது வேரான விவசாயத்தை மறக்கவில்லை என்பதை பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது. அனைவரும் விவசாயத்தை லாபகரமான ஒன்றாகவும் நிலையான ஒன்றாகவும் மாற்ற கவனம் செலுத்த வேண்டும்” என கூறியுள்ளார்.