புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 5 ஜனவரி 2022 (11:17 IST)

ஒரே நாளில் 3 மடங்காக உயர்ந்த கொரோனா பாதிப்பு: வேலூர் மாவட்ட மக்கள் அதிர்ச்சி!

வேலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் மூன்று மடங்காக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
சென்னை உள்பட தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் படிப்படியாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். 
 
இந்த நிலையில் நேற்று 87 பேருக்கு வேலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் கண்டறியப்பட்ட நிலையில் இன்று 108 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது 
இதனை அடுத்து ஒரே நாளில் மூன்று மடங்காக உயர்ந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் இருந்து வருபவர்களால் வேலூர் மாவட்டத்தில் கொரோனா அதிகமாக பரவி வருவதாக கூறப்படுகிறது.