வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 10 ஜூன் 2024 (15:13 IST)

நாம் தமிழர் கட்சி, விசிகவுக்கு எந்த சின்னம்? தமிழக தேர்தல் ஆணையம் தகவல்..!

நாம் தமிழர் கட்சி மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகிய இரண்டு கட்சிகளும் நடைபெற்ற முடிந்த பாராளுமன்ற தேர்தலில் மாநில கட்சி என்ற அந்தஸ்தை பெற்றுள்ள நிலையில் அவர்களுக்கு என சொந்தமாக ஒரு சின்னம் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 
 
இந்த நிலையில் இந்த இரண்டு கட்சிகளுக்கும் எந்த சின்னம் ஒதுக்கப்படும் என்ற கேள்விக்கு தமிழக தேர்தல் ஆணையர் பதிலளித்துள்ளார். 
 
நடைபெற்ற முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகிய இரண்டு கட்சிகளுக்கும் மாநில அந்தஸ்து கிடைத்தது. இந்த நிலையில் இந்த இரண்டு கட்சிகளுக்கும் எந்த சின்ன வழங்கப்படும் என்று தலைமை தேர்தல் தமிழக தேர்தல் ஆணையர் சாஹூ இடம் கேள்வி கேட்கப்பட்டது.
 
அதற்கு அவர் இந்த இரு கட்சிகளுக்கும் எந்த மாதிரியான சின்னத்தை வழங்க வேண்டும் என்பதை தலைமை தேர்தல் ஆணையம் தான் முடிவு செய்யும் என்று கூறியுள்ளார். நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி 39 தொகுதிகளிலும் 8.9 வாக்குகளை பெற்றுள்ளது என்பதும் அதேபோல் விடுதலை சிறுத்தைகள் கட்சியை இரண்டு தொகுதிகளில் வென்றுள்ளதை அடுத்து அந்த கட்சிக்கு மாநில அந்தஸ்து கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva