1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 7 ஜூன் 2024 (12:52 IST)

2 கட்சி தலைவர்களுக்கு பாராட்டு தெரிவித்த தவெக தலைவர் விஜய்.. கூட்டணி உறுதியா?

நடைபெற்ற முடிந்த பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட இரண்டு கட்சி தலைவர்களுக்கு மட்டும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தனது சமூக வலைதளத்தில் பாராட்டு தெரிவித்துள்ளார். 
 
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் விஜய், தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய நிலையில் அவர் சீமானின் நாம் தமிழர் கட்சியுடன் இணைந்து 2026 தேர்தலை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
இந்த நிலையில் நடைபெற்ற முடிந்த பாராளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி 8 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்று மாநில கட்சியாக அங்கீகாரம் பெற்றுள்ளது. அதேபோல் விடுதலை சிறுத்தை கட்சியும் அங்கீகாரம் பெற்றுள்ளது. இந்த இரண்டு கட்சி தலைவர்களுக்கும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது சமூக வலைதளத்தில் கூறியிருப்பதாவது:
 
நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் மக்களின் நம்பிக்கையைப் பெற்று, மாநிலக் கட்சிகளாக அங்கீகாரம் பெறும் தகுதியை வென்றெடுத்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும், நாம் தமிழர் கட்சிக்கும் எனது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
 
மேலும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இருந்து உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அனைவருக்கும் தங்கள் பணி சிறக்க வாழ்த்துகள்.
 
Edited by Mahendran