1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 22 மே 2024 (08:13 IST)

வங்கக் கடலில் இன்று புயல் சின்னம்: தமிழகத்தில் 6 நாள்கள் மழை பெய்ய வாய்ப்பு..!

storm
வங்க கடலில் இன்று காற்றழுத்த தாழ்வு மையம் தோன்றும் என ஏற்கனவே இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்திருந்த நிலையில் இன்று வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மையம் உருவாக இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையமும் உறுதி செய்துள்ளது.

தென்மேற்கு வங்க கடலின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதன் காரணமாக இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்றும் இது வடகிழக்கு திசையில் நகர்ந்து மே 24ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மத்திய வங்க கடல் பகுதியில் மையம் கொண்டு வலுப்பெறும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடகிழக்கு திசையில் நகரக்கூடும் என்றும் இது புயலாக மாறுமா என்பது இன்னும் ஒரு சில நாட்களில் தெரிய வரும் என்றும் அப்படியே புயலாக மாறினாலும் வடகிழக்கு திசையில் வங்கதேசத்தை நோக்கி செல்ல வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

குறைந்த காற்றழுத்த தாழ்வு மையம் இன்று வங்க கடலில் தோன்றுவதால் இன்று முதல் மே 24ஆம் தேதி வரை தமிழகத்தின் பல பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்று மே 25 முதல் 27 வரை தமிழகம் புதுவை காரைக்கால் பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Edited by Siva