அதிமுக தலைவர்கள் பேசாமல் இருப்பது நல்லது: வானதி சீனிவாசன்
கூட்டணி பாதிப்பு இல்லாமல் இருக்க வேண்டும் என்றால் அதிமுக தலைவர்கள் பேசாமல் இருப்பது நல்லது என பாஜக பிரபலம் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
கோவையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வானதி சீனிவாசன் அதன்பின் பேசியபோது 'என் மண் என் மக்கள் யாத்திரைக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என்று கூறினார். இளைஞர்கள் அதிகமாக பாஜகவில் இணைந்து வருகிறார்கள் என்றும் இதனால் பாஜக தமிழகத்தில் நல்ல வளர்ச்சியை பெற்றுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் பாஜக மாநில தலைவருக்கு அதிமுக தலைவர்கள் தரும் மரியாதை தனிநபருக்கு தருவதில்லை, கட்சி தலைவராக இருக்கும் அவருக்கு அதிமுக தலைவர்கள் மரியாதை அளிக்க வேண்டும் என்று கூறினார்
மேலும் கூட்டணியை பாதிக்கும் கருத்துக்களை அதிமுக தலைவர்கள் பேசாமல் இருப்பது நல்லது என்றும் தேசிய ஜனநாயக கூட்டணி பலமாக அமைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
Edited by Siva