புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj kiyan
Last Updated : சனி, 7 மார்ச் 2020 (14:09 IST)

இடியின் குரல், மின்னலின் வேகம், தீயின் தீவிரம், புயலின் உரையாடல்.. இனி எப்போது கேட்ப்போம் - வைரமுத்து ’டுவீட்’

திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் மரணம் கவிஞர் வைரமுத்து அஞ்சலி

உடல்நலக்குறைவு காரணமாக கடந்த மாதம் 24ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட திமுக பொது செயலாளரும், மூத்த தலைவருமான க.அன்பழகன் நேற்று இரவு காலமானார். க.அன்பழகனின் மறைவுக்கு பல்வேறு கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளதுடன், நேரில் சென்று அஞ்சலியும் செலுத்தி வருகின்றனர்.
 
இந்நிலையில், கவிஞர் வைரமுத்து தனது பேராசிரியர் அன்பழகன் இல்லத்துக்குச் சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
 
இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது :
இடியின் குரல், மின்னலின் வேகம், தீயின் தீவிரம், புயலின் உரையாடல் அனைத்தும்கொண்ட பெரும் பேச்சாளர் #பேராசிரியர்  பேசுவதை நிறுத்திக்கொண்டார். இனி எப்போது கேட்போம் அந்த இனமானத் தமிழை? என்று உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.