திங்கள், 17 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 12 அக்டோபர் 2019 (08:48 IST)

வைகோ & காங்கிரஸ் தலைவர் சந்திப்பு – மறைந்ததா மனக்கசப்பு ?

காஷ்மீர் விவகாரத்தில் வைகோ மற்றும் காங்கிரஸ் தலைவர்களுக்கு இடையே எழுந்த மனக்கசப்பை மறந்து சந்தித்துள்ளனர்.

காஷ்மீர் பிரிவினையில் நாடாளுமன்றத்தில் முழங்கிய் வைகோ இந்த பிரச்சனைக்கு பாஜக மட்டும் காரணமல்ல காங்கிரஸும்தான் என விமர்சனம் செய்தார். அதற்குப் பதிலளிக்கும் வகையில் வைகோவை விமர்சித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி காட்டமான அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதற்கு வைகோ பதிலளிக்க பிரச்சனை முற்றிக்கொண்டே போனது.

இந்நிலையில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் காங்கிரஸூக்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்தார். மேலும் நாங்குநேரி வேட்பாளர் ரூபி மனோகரனுக்கு ஆதரவாக பிரச்சாரத்திலும் ஈடுபட இருக்கிறார். இந்நிலையில் திருநெல்வேலியிலுள்ள வைகோவின் சகோதரர் இல்லத்தில் நேற்று இருவரும் ஒருவருக்கொருவர் பொன்னாடை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும் இடைத்தேர்தல் ஆதரவுக்கு நன்றி தெரிவித்தார். இதனால் திமுக கூட்டணியில் இருந்த இருக் கட்சிகளுக்கு இடையிலான மனக் கசப்பு மறைந்துள்ளது.