தமிழகம் வருகிறார் அமித்ஷா.. 2026 தேர்தலுக்கு ஆலோசனையா?
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இந்த மாத இறுதியில் தமிழக வர இருப்பதாகவும், 2026 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் தேர்தலில் பாஜகவின் வியூகம் குறித்து ஆலோசனை தர இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வரும் டிசம்பர் 27ஆம் தேதி தமிழகம் வருகிறார். டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வரும் அவர், அதன்பின் ஹெலிகாப்டர் மூலம் திருவண்ணாமலை வருவதாகவும், அங்கு புதிதாக கட்டப்பட்ட பாஜக அலுவலகத்தை திறந்து வைக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
அதன் பின்னர் பாஜக கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தும் அமைச்சர், 2026 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் தமிழக சட்டப்பேரவை தேர்தல் குறித்து ஆலோசனை தர இருப்பதாக தெரிகிறது. கூட்டணி எப்படி அமைப்பது, தேர்தலை எப்படி எதிர்கொள்வது, மக்களை எப்படி சந்திப்பது, மத்திய அரசின் திட்டங்களை மக்களுக்கு கொண்டு செல்வது குறித்து அவர் அறிவுறுத்த உள்ளார்.
அதன் பின்னர் திருவண்ணாமலை கோவிலில் சாமி தரிசனம் செய்யும் அவர், அன்றைய தினமே திருவண்ணாமலையிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் சென்னை வந்து, அங்கிருந்து டெல்லி செல்ல இருப்பதாக தகவல்கள் உள்ளன.
Edited by Siva