புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Papiksha Joseph
Last Updated : புதன், 30 டிசம்பர் 2020 (16:59 IST)

நியாய விலைக் கடை ஊழியர்களுக்கு சீருடை - அமைச்சர் செல்லூர் ராஜூ

தமிழகத்தில் நியாய விலைக் கடை ஊழியர்களுக்கு சீருடை வழங்கப்படும் என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். 
 
தமிழகத்தில் உள்ள 33,000 நியாய விலைக் கடைகளில் பணியாற்றும்  21,600 விற்பனையாளர்கள் மற்றும் 3,800 எடையாளர்களுக்கு சீருடை வழங்கப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ அறிவித்துள்ளார். 
 
இதுகுறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ , பணியின் போது ஊழியர்கள் சீருடை அணியாமல் இருந்தால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என கடுமையாக எச்சரித்துள்ளார்.