டிஎன்பிஎஸ்சி-க்கு புதிய கட்டுப்பாட்டு செயலாளர் நியமனம்!
தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பு ஏற்றதில் இருந்து பல்வேறு அரசு அலுவலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரிகள் பலர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என்பதும், தமிழகத்தில் தற்போது கிட்டத்தட்ட அனைத்து மாவட்ட கலெக்டர்களும் புதிதாக பதவி ஏற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் டிஎன்பிஎஸ்சி தேர்வு வாரியத்திற்கு புதிய தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் நியமனம் செய்யப்பட்டுளார். டிஎன்பிஎஸ்சி அமைப்புக்கு புதிய தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் நியமனம் செய்யப்படவுள்ளதாக ஏற்கனவே தகவல் வந்த நிலையில் தற்போது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வு கட்டுப்பாட்டு செயலாளராக உமாமகேஸ்வரி என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
புதுக்கோட்டை ஆட்சியராக இருந்த உமா மகேஸ்வரி அவர்கள் தற்போது டிஎன்பிஎஸ்சி அமைப்புக்கு புதிய தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் நியமனம் செய்யப்பட்டதை அடுத்து டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவரும், ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியுமான பாலச்சந்திரன் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையச் சட்டம் 1954-ன்படி தமிழக ஆளுநரின் ஒப்புதலோடு புதுக்கோட்டை ஆட்சியராக இருந்த உமா மகேஸ்வரி, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளராக இருந்த நந்தகுமாருக்கு பதிலாக நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோலத் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலராக கிரண் குராலா ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது.