திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 7 செப்டம்பர் 2018 (14:35 IST)

என்ன தகுதி இருக்கு? பொங்கியெழுந்த திமுக தொண்டர் : மன்னிப்பு கேட்ட உதயநிதி

திமுக விழாவில் முன்னணி தலைவர்கள் பட வரிசையில் உதயநிதி ஸ்டாலின் படம் இடம் பெற்றிருந்த சம்பவத்திற்கு உதயநிதி மன்னிப்பு கேட்டுள்ளார்.

 
சமீபகாலமாக, திமுக செயல் தலைவரின் மகன் உதயநிதி ஸ்டாலின் திமுக தொடர்பான அரசியல் கூட்டங்கள் மற்றும் விழாக்களில் தவறாமல் பங்கேற்கிறார். அதோடு, அவரை மூன்றாம் கலைஞர் என புகழ்ந்து உடன் பிறப்புகள் போஸ்டர் அடித்து ஒட்டிய சம்பவங்களும் நடந்தது. 
 
மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் நினைவேந்தல் நிகழ்ச்சியில் ஸ்டாலினின் மகனும், நடிகருமான உதயநிதியை புகழ்ந்து வைக்கப்பட்ட பேனர்களும் சர்ச்சைகளை எழுப்பியது.
 
அதேபோல், தஞ்சாவூரில் சமீபத்தில் நடைபெற்ற பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த பேனரில் கருணாநிதி, ஸ்டாலின் மற்றும் உதயநிதியின் புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தது.

 
இந்த புகைப்படத்தை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்த ஒரு திமுக தொண்டர் “ஒரு திமுக தொண்டனாய் இதெல்லாம் எவ்வளவு அருவருப்பா இருக்கு தெரியுமா? 
 
உங்களுக்கு தோணலையா? 
 
முன்னனி தலைவர்கள் மேடைல உங்க போட்டோ இடம்பெற உங்கள் தகுதி என்ன?” என உதயநிதியிடம் கேள்வி எழுப்பியிருந்தார்.
 
இந்நிலையில், தவறு! மீண்டும் நடக்காது என உதயநிதி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிலளித்துள்ளார்.