விலை போனவர்களுக்கு அரசியலில் இடமில்லை! – அரசியல் பிரபலத்தை பங்கம் செய்த உதயநிதி!
தான் தூத்துக்குடி சென்று வந்ததை விமர்சித்த முக்கிய அரசியல் பிரபலத்தை பெயர் சொல்லாமல் பங்கம் செய்துள்ளார் உதயநிதி ஸ்டாலின்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தை, மகன் இறப்பு சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் நேற்று முன் தினம் திமுக இளைஞரணி செயலாளர் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சென்று சந்தித்து வந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
உதயநிதி இ-பாஸ் வாங்காமல் சென்றார் என அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்ட, தான் இ-பாஸ் அனுமதி பெற்றே சென்றதாக உதயநிதி விளக்கம் அளித்துள்ளார். இந்நிலையில் முக்கிய தமிழ்தேசிய அரசியல் பிரபலம் திமுகவினர் சட்டத்தை மீறுவதாக மு.க.ஸ்டாலின் குடும்பத்தினர் சிலரின் பெயரையே குறிப்பிட்டு பேசியிருந்தார்.
தம்பிகளால் அண்ணன் என மரியாதையோடு அழைக்கப்படும் அந்த அரசியல் பிரபலத்தின் கருத்துக்கு பெயர் குறிப்பிடாமலே பதிவிட்டுள்ள உதயநிதி ” அப்பாவிகளை கொன்ற போலீசை கண்டிக்காதவர்கள், போலீசை காப்பாற்றும் அரசை விமர்சிக்காதவர்கள், அந்த குடும்பத்துக்கு ஆறுதல்கூட சொல்லாதவர்கள், சாத்தான்குளம் சென்ற என்னை விமர்சிக்கிறார்கள். அவர்களை மக்கள் அறிவர். விலைபோனவர்களுக்கு அரசியலில் இடமில்லை என்பதைக் காலம் உணர்த்தும், காத்திருங்கள்!” என்று கூறியுள்ளார்.