எலக்‌ஷன் முடியுற வரை எய்ம்ஸ் என் கண்ட்ரோல்ல..! – உதயநிதி தேர்தல் பிரச்சாரம்!

Prasanth Karthick| Last Modified ஞாயிறு, 4 ஏப்ரல் 2021 (10:54 IST)
தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் முடியும் வரை எய்ம்ஸ் மருத்துவமனை தனது கையில் என பேசியுள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் நாளை மறுநாள் நடைபெற உள்ள நிலையில் இன்று மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவடைவதால் பிரச்சார பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றது. இந்நிலையில் அம்பத்தூர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஜோசப் சாமுவேலுக்கு ஆதரவாக உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர் “மதுரையில் மூன்று வருடங்களுக்கு முன்பு பிரதமர் மோடி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு செங்கல் நட்டு சென்றார். அதை நான் கையோடு எடுத்து வந்துள்ளேன். கடந்த 10 நாட்களாக எய்ம்ஸ் மருத்துவமனையை காணவில்லை என தேடிக் கொண்டிருக்கிறார்கள். ஏப்ரல் 6 வரை எய்ம்ஸ் என்னிடம்தான் இருக்கும். ஏப்ரல் 7ம் தேதி அதை மீண்டும் ஒப்படைத்து விடுவேன்” என பேசியுள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :