புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 4 ஜனவரி 2020 (14:02 IST)

பயந்துட்டாங்க! இனிமேல் தேர்தல் நடத்துறது சந்தேகம்தான்! – உதயநிதி ஸ்டாலின்!

தமிழக உள்ளாட்சி தேர்தல்களில் அதிக இடங்களில் திமுக வென்றிருக்கும் நிலையில் அதிமுக பயந்துள்ளதாக உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

தமிழகத்தின் ஊராட்சி உள்ளாட்சி பகுதிகளுக்கான தேர்தல் கடந்த டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. ஒன்றிய கவுன்சிலர் மற்றும் மாவட்ட கவுன்சிலர் இடங்களில் அதிகமான இடங்களை திமுக கைப்பற்றியுள்ளது. ஆளும்கட்சியான அதிமுக இரண்டாவதாக அதிக இடங்கள் பெற்றுள்ளது.

இந்நிலையில் திமுகவின் வெற்றி குறித்து பேசிய திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ”தேர்தல் பணிகள் தொடங்கிய போது திமுக பயப்படுகிறது என்று தொடர்ந்து சொல்லிக்கொண்டே வந்தார்கள். யார் உண்மையிலேயே பயந்தார்கள் என்பதை இந்த தேர்தல் காட்டிவிட்டது. தற்போதைய தேர்தல் முடிவுகளை பார்த்த பிறகு அடுத்த தேர்தலை நடத்துவார்கள் என நம்பிக்கையில்லை” என கூறியுள்ளார்.