வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 4 ஜனவரி 2020 (11:59 IST)

ரயில் முன் பாய்ந்த காதல் ஜோடி: விருதுநகர் அருகே சோகம்!

விருதுநகர் அருகே காதல் ஜோடி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் அருகே உள்ள வில்லிபத்திரி கிராமத்தை சேர்ந்தவர் சரவணன். இவர் விருதுநகரில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்துள்ளார். அதே கல்லூரியில் ரோசல்பட்டியை சேர்ந்த ரஞ்சிதா என்பவரும் படித்து வந்துள்ளார். இந்நிலையில் சரவணனுக்கும், ரஞ்சிதாவுக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது.

இதுகுறித்து அவர்களது பெற்றோருக்கு தெரிய வந்துள்ளது. இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பெற்றோர்கள் அவர்களது காதலை ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் மனமுடைந்த காதல் ஜோடி தற்கொலை செய்து கொள்ள தீர்மானித்துள்ளனர்.

நேற்று மாலை விருதுநகர் வழி சாத்தூர் ரயில் பாதையில் வந்த ரயிலின் முன்பு பாய்ந்து அவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இருவரின் உடலையும் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் விருதுநகர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.