செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 1 பிப்ரவரி 2021 (21:49 IST)

எவையெல்லாம் தனியாருக்கு விற்கப்படும்? பட்ஜெட் குறித்து கிண்டலடித்த உதயநிதி!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்த பட்ஜெட் குறித்து கருத்து கூறிய திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் எவையெல்லாம் தனியாருக்கு விற்கப்படும்? என்பதை குறிக்கும் பட்ஜெட் என கிண்டலடித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
 
எல்.ஐ.சி-யில் தனியார் முதலீடு, தனியாரே மின்சாரம் விநியோகிக்கலாம், ஏர் இந்தியா தனியாருக்கு, 2 பொதுத்துறை வங்கிகள் தனியாருக்கு...’ மக்களுக்கு எவையெல்லாம் செய்யப்படும் என்பதை விட எவையெல்லாம் தனியாருக்கு விற்கப்படும் என்பது தான் மத்திய பட்ஜெட்டில் அதிகம் இடம்பெற்றுள்ளது. 
 
சிறு-குறு நிறுவனங்களுக்கு குறைவான நிதி - மக்கள் எதிர்ப்பையும் மீறி 8 வழிச்சாலை திட்டம் செயல்படுத்தப்படும் என்பதும் - சர்ச்சைக்குரிய புதிய கல்வி கொள்கையை 15,000 பள்ளிகளில் அமல்படுத்துவோம் என்பதும் மத்திய அரசின் ஆதிக்க மனநிலையையே காட்டுகிறது. திருக்குறளை மேற்கொள் காட்டும்
 
.நிதியமைச்சரின் கண்களுக்கு அசாம் & மேற்கு வங்க தேயிலை தோட்ட தொழிலாளர்கள் மட்டுமே தெரிகின்றனர். நல்ல திட்டங்களை தவிர்த்து - தீங்கான திட்டங்களை மட்டும் தமிழகத்துக்கு தரும் இந்த பட்ஜெட் தமிழர்களுக்கு எதிரான மத்திய அரசின் எதேச்சதிகார போக்கின் ஆவணம் என்பதே உண்மை