புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 22 நவம்பர் 2023 (13:01 IST)

பிரதமர் நரேந்திர மோடிக்கு எப்பொழுதும் என் ஞாபகம் தான்.. அமைச்சர் உதயநிதி

பிரதமர் நரேந்திர மோடிக்கு எப்பொழுதும் என் ஞாபகம் தான் என்றும், என்னைப் பற்றி ராஜஸ்தான் பிரச்சாரத்தில் மோடி பேசுகிறார என்றும்  அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
 
மேலும் ரைடு விட்டால் நாங்கள் பயப்பட மாட்டோம், எங்கள் கிளை செயலாளர் கூட உங்களைப் பார்த்து பயப்பட மாட்டான் என்றும் அவர் தெரிவித்தார்,.
 
மேலும் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் சினிமா படப்பாணியில் மத்திய அரசு ஊழல் செய்துள்ளது என்றும், தமிழ்நாட்டிற்கான ஜிஎஸ்டி வரி பகிர்வை மத்திய அரசு முறையாக வழங்கவில்லை என்றும், இந்தியாவை காப்பாற்ற வேண்டுமெனில், இந்தியா கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்றும் சேலம் திமுக இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
 
இந்தியாவில் இருந்து பாசிசத்தை ஒழிக்க, சேலம் மண்ணிலிருந்து ஒரு மாபெரும் பயணத்தை துவக்க உள்ளோம்" என்றும் அவர் தெரிவித்தார்.
 
Edited by Mahendran