1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 21 நவம்பர் 2023 (18:25 IST)

அண்ணாமலையுடன் கருத்து வேறுபாடு...பாஜகவில் இருந்து விலகிய ஓ.பி.சி துணைத்தலைவர்

edapadi palanisamy- ashok kumar
எடப்பாடி பழனிசாமி முன்னிலையில்  அதிமுகவில் இணைந்தார் பாஜக ஓபிசி அணியின் துணைதலைவர் அசோக்குமார்.

சமீபத்தில்   பாஜகவுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக கூடணியில் இருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

இந்த நிலையில், பாஜகவில் இருந்து சிலர் அதிமுகவுக்கு சென்றனர்.

இந்த நிலையில், பாஜக மொடக்குறிச்சி எம்.எல்.ஏ சரஸ்வதியின் மருமகனும், அக்கட்சியில் மா நில ஓபிசி அணியின் துணை தலைவருமான அசோக்குமார், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.

பாஜக  மாநில தலைவர் அண்ணாமலையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர் பாஜகவில் இருந்து விலகியதாக தகவல் வெளியாகிறது.